இரவு நேரத்தில் பிரேத பரிசோதனைக்கு அனுமதி - மத்திய சுகாதாரத்துறை

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2021-11-15 13:54 GMT
இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்கான வழிமுறைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. 

இதன்படி, போதிய மருத்துவ கட்டமைப்பு உள்ள மருத்துவமனையில் இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உயிரிழந்த நபர்களின் உறவினர்களுக்கு ஏற்படும் கால விரயம் குறைக்கப்படும் என்றும், விரைவாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளும் போது உடல் உறுப்பு தானங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உடல் உறுப்பு தானம் தொடர்பான பிரேத பரிசோதனைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், இரவில் நடைபெறும் பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சந்தேக மரணம், பாலியல் வன்புணர்வு, தற்கொலை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்