வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் வேதனை - கழிவுநீருடன் கலந்து தேங்கிய மழைநீர்

கிருஷ்ணகிரி அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளில் மழைநீருடன் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் படையெடுப்பதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Update: 2021-11-15 07:41 GMT
கிருஷ்ணகிரி அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளில் மழைநீருடன் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் படையெடுப்பதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். காவேரிப்பட்டணம் அடுத்த செளட்டஹள்ளி பகுதியில் கழிவுநீரூடன் சேர்ந்து பெருகெடுத்த மழைநீர் வீடுகளில் தேங்கியது. தேங்கி கிடக்கும் மழைநீரால்  வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக கூறும் அப்பகுதியினர், குழந்தைகளை வைத்து கொண்டு சிரமத்திற்கு ஆளாவதாக வேதனை தெரிவித்தனர். இதனிடையே, மங்கம்மா என்ற மூதாட்டி தனது வீட்டிற்குள் மழைநீருடன் வந்த பாம்பை லாவகமாக பிடித்து வெளியேற்றினார். 

ஜம்மு காஷ்மீரில் கலாச்சாரத் திருவிழா 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் கலாச்சாரத் திருவிழா நடைபெற்றது. குப்வாரா மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரவும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் கலாச்சாரத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று பாடல் பாடி நடனமாடி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

போலீசாரால் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள்

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் சுட்டு கொள்ளப்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன் தினம் கட்சிரோலியின் கியாரபட்டி காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. போலீசாரின் அதிரடி தாக்குதலுக்கு நக்சலைட்டுகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அங்கிருந்த சில நக்சலைட்டுகள் தப்பி ஓடிய நிலையில் காட்டுப்பகுதியில் இருந்த ஏராளமான துப்பாக்கிகளும், வெடிமருந்துகளும், உடமைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

பெங்களூரில் நடைபெற்ற "கிருஷி மேளா"

பெங்களூரில் நடைபெற்ற கிருஷி மேளா எனப்படும் விவசாயக் கண்காட்சியில், மூன்றரை வயதான கிருஷ்ணா காளை 1 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. பெங்களூரில் உள்ள ஜிகேவிகே வளாகத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரம்பரிய மாட்டினமாக ஹள்ளிகர் இனம் கருதப்படுகிறது. இதன் விந்தணுவானது அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில், வெறும் 1 டோஸ் மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹள்ளிகர் இனத்தைச் சேர்ந்த இந்த கிருஷ்ணா காளையே ஏலத்தில் பங்கேற்றவர்களின் முதல் தேர்வாக இருந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கு கிருஷ்ணா காளை ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெலாரஸ்-போலந்து எல்லைப்பகுதி - காத்துக் கொண்டுள்ள புலம்பெயர்ந்தோர்

பெலாரஸ் மற்றும் போலந்து நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் காத்துக் கிடந்தனர். ஐரோப்பிய ஒன்றியங்களுக்குள் புலம்பெயர்ந்தோர் நுழைவதற்கு பெலாரஸ் வழி வகுப்பதாக போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் குற்றம் சாட்டின. இந்நிலையில், போலந்து பெலாரஸ் இடையேயான எல்லைப் பகுதியில், போலந்து அதிகாரிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைந்து விட வேண்டும் என்று புலம் பெயர்ந்த மக்கள், கனவுகளோடு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் எல்லைப் பகுதியில் குழந்தைகளோடு காத்துக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு ஸ்வெர்வ் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஸ்வெர்வும், இத்தாலி வீரர் பெரட்டனியும் மோதினர். இதில் முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் ஸ்வெர்வ் வென்றார். 2-வது செட்டில் 1-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஸ்வெர்வ் முன்னிலையில் இருந்தபோது, பெரட்டனி எதிர்பாராத விதமாக காயம் அடைந்தார். காயம் காரணமாக அவர் தொடர்ந்து ஆட முடியாமல் வெளியேறினார். இதனால், ஸ்வெர்வ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.





Tags:    

மேலும் செய்திகள்