குடிநீர் தொட்டியில் சாணமா? - பரபரப்பான புதுக்கோட்டை.. உண்மை என்ன?

Update: 2024-04-30 03:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதியில், நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டார் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில், மாட்டு சாணம் கலக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு புகார் எழுந்த‌து. இதையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தியதோடு, குடிநீர் மாதிரியை திருச்சியில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்த‌தற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். அந்த குடிநீரில், இக்கோட்டி என்ற பாக்டீரியா இல்லாத‌தால், எந்த மாட்டுச் சாணமும் கலக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆட்சியர், தொற்று எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு உக‌ந்த‌து என்றும் ஆய்வு முடிவு வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருந்த‌தால், குப்பைகள் அடியில் இருந்த‌தை மாட்டுச் சாணம் என நினைத்த‌தாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்