கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட எம்.பி. நிதி - தவணை முறையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பட்டு நிதியை தவணை முறையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2021-11-10 15:33 GMT
இதன்படி நடப்பு  2021-2022ம் நிதியாண்டுக்கான நிதியின் பகுதி தொகை 2 கோடி ரூபாயை, விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 2022-2023 முதல் 2025 - 2026 ஆண்டு வரையிலான  மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் என்பதை ஒவ்வொரு நிதியாண்டும் தலா இரண்டரை கோடி ரூபாயை, இரு தவணைகளாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்து. இதனால் எம்.பி.க்களின் தலா பத்து கோடி ரூபாய், அரசு நிதியில் சேர்க்கப்படும். இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் அரசுக்கு 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி சேமிக்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்