புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-21 12:41 GMT
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை என கூறி வழக்கு தொடரப்பட்டது

இதில், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  அரசாணைகளை எதிர்த்து எதிர்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இதன் மீதான விசாரணையில், இட ஒதுக்கீட்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அரசியல் சட்ட விதிமுறைகள் பின்பற்றவில்லை என கூறிய நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை அக்டோபர் 21ம் தேதி வரை நிறுத்தி வைத்தனர். 

இந்த நிலையில் தேர்தல் நடவடிக்கை நிறுத்தி வைப்பு உத்தரவுக்கு எதிரான வழக்கில் மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டுமென்ற நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை மேலும் நீட்டித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்