நிபா வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்புக்கு "வெண்டிலேட்டர் இல்லாததே இறப்புக்கு காரணம்" - கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்புக்கு, அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லாததே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 09:58 GMT
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்புக்கு, அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லாததே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோடு அருகே முன்னூரை சேர்ந்த முஹமது ஹாசிம் எனும் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவர் கோழிக்கோடு அரசு மருத்துவனையில் வெண்டிலேட்டர் இல்லாததே மரணத்திற்கு காரணம் என்று குளத்தூரை சேர்ந்த ஜெய்சிங் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மூச்சு பிரச்சினையால் தவித்த சிறுவனுக்கு வெண்டிலேட்டர் கிடைக்காததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், முஹமது ஹாசிம் மாதிரி புனே வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பியதால் வைரஸ் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். கேரளாவில் உள்ள 2 ஆய்வகங்களுக்குத் தேவையான தொகைகளை வழங்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்