"18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2021-04-26 10:35 GMT
காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய அவர், மாநிலத்திற்கு 1.32 கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளோம் எனக் கூறினார்.  தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய், மாநில அரசுக்கு 400 ரூபாய், மத்திய அரசுக்கு150 ரூபாய் என 3 விலைகளை நிர்ணயம் செய்யாமல், அனைத்து தரப்புக்கும் ஒரே விலையாக 150 ரூபாய்க்கு தடுப்பூசி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வாழ்நாள் முழுவதும் லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம், இது அதற்கான நேரமல்ல என்றும் கூறினார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு 18 வயதுக்கு குறைவான குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்துள்ளனர் எனக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், குழந்தைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், அவர்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்