சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்து அனைவரும் உணர்ந்துள்ளனர் - பிரதமர் மோடி

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஸ்வீடன் நாட்டுடன் இந்தியா இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-06 07:54 GMT
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஸ்வீடன் நாட்டுடன் இந்தியா இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் மற்றும் இந்தியா இடையேயான இணைய வழி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார் 

அப்போது பேசிய பிரதமர் மோடி உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பின் போது  பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து அனைவரும் உணர்ந்து இருப்பதாக கூறினார்.

உலகமே  கொரோனா தொற்றை எதிர்த்து போராடி கொண்டிருந்த போது இந்தியா 50 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை வழங்கியிருப்பதாக  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே இந்தியாவின் கலாச்சாரம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி 
பாரிஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான 
ஒப்பந்த உறுதிகளை நிறைவேற்றுவதை நோக்கி இந்தியா முன்னேறி கொண்டிருப்பதாக 
குறிப்பிட்டார்.

புதுமை தொழில்நுட்பம் முதலீடு ஆராய்ச்சி போன்றவற்றில் இந்தியாவும் - சுவீடனும் உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும்  பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்