லோன் வழங்கி அதிக வட்டி வசூல் செய்ததாக புகார் - 2 மகன்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்

லோன் வழங்கி அதிக வட்டி வசூல் செய்ததாக தன் மகன்கள் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உதவி ஆய்வாளருக்கு ஆந்திராவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Update: 2021-01-02 03:22 GMT
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தவரம் காவல் நிலையதில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் நீலகண்டா. 

இவரின் மகன்களான ஈஸ்வர் மற்றும் நாகராஜூ ஆகிய 2 பேரும் சீனாவை சேர்ந்த china mobile money application என்ற பண செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு லோன் வழங்கி வந்துள்ளனர். 

பின்னர் கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி வசூல் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த கூடுதல் வட்டியால் பாதிக்கப்பட்ட பலரும் என்ன செய்வதென தெரியாமல் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என கூறி பாதிக்கப்பட்ட பலரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நிலைமை தீவிரமானது.

இதையடுத்து தெலங்கானா மாநில போலீசார் இந்த விவகாரத்தில் அதிரடியாக களமிறங்கினர். செயலி மூலம் லோன் வழங்கியவர்களை கண்காணித்து கைது செய்து வந்தனர். 

அப்போது தான் எஸ்.ஐ. நீலகண்டாவின் மகன்கள் 2 பேரும் இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீலகண்டா, சினிமாவில் வரும் பாசக்கார தந்தை போல இல்லாமல், சற்று அதிரடியாகவே களமிறங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்