கேரள தங்க கடத்தல் வழக்கு - முதல்வரின் கூடுதல் தனிச் செயலர் விசாரணைக்கு ஆஜர்

தங்க கடத்தல் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஆஜராக கேரள முதல்வரின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கு நான்காவது முறையாக நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

Update: 2020-12-17 08:07 GMT
கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை, சுங்கத் துறை, என்.ஐ.ஏ. உள்ளிட்ட அமைப்புகள் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன், இந்த வழக்கில் பிரதியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், முதல்வரின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கும் இவ்விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.  கொரோனா தொற்று பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை நோட்டீஸ் அளிக்கப்பட்ட போதும், ரவீந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,   நான்காவது முறையாக இன்று ஆஜராக ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை நான்கு தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ரவீந்திரன் இன்று ஆஜராகி உள்ளார். இதனிடையே, அமலாக்கத் துறையினர் தன்னை காவலில் எடுத்து விசாரிக்க  தடை விதிக்க கேட்டு ரவீந்திரன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்