தால் ஏரியின் அழகை மீட்டெடுக்கும் பணி - அல்லி இலைகளை அகற்றும் பணி நிறைவு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான தால் ஏரியை சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Update: 2020-11-21 06:38 GMT
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான தால் ஏரியை சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோடைக்கால சுற்றுலாத் தலமான காஷ்மீரில் உள்ள தால் ஏரியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் செல்கின்றனர். காஷ்மீரின் மகுடத்தில் இருக்கும் வைரக்கல் என தால் ஏரி அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் அழகைக் கெடுக்கும் அல்லி இலைகளை அகற்றும் பணிகள் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக, தால் ஏரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்