காஷ்மீரில் பாஜக தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொலை - பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாஜக தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-30 06:56 GMT
குல்காமில் இரவு 3 பாஜக தொண்டர்கள் சென்றுக்கொண்டிருந்த காரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் உள்ளூர் பாஜக தொண்டர்களை பயங்கரவாதிகள் குறிவைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் காஷ்மீரில் சிறப்பாக பணியாற்றியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவர்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகளால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்