வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்த வழக்கு - மத்திய அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம்

கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில், வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்த வழக்கில், கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒரு வாரக் காலம் அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்

Update: 2020-10-05 07:45 GMT
கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில், வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்த வழக்கில், கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒரு வாரக் காலம் அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். இது தொடர்பான வழக்கு  நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 
கடன் தவணை உரிமை காலத்தில் செலுத்த வேண்டிய தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. எப்போது கேட்டாலும் பிரச்சனைகளை களைந்து விடலாம் என கூறுகிறீர்களே தவிர எப்போது  பிரச்சனைகளை களைய போகிறீர்கள்? என நீதிபதிகள் ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்