வணை உரிமை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மனுக்களில் வியாழக்கிழமைக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-28 09:00 GMT
இது தொடர்பான மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தவணை உரிமை காலத்தில், வட்டிக்கு வட்டிக்கு வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக அரசின் உயர்நிலை அளவில் எடுக்கப்படும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பதில் மனு தாக்கல் செய்ய ஓரிரு நாட்கள் கால அவகாசம் தேவை எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.  வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதே நேரத்தில், தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்