டெல்லியில் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்ய முடிவு - மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து பிரதமருக்கு கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-11 12:39 GMT
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியில் 9 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுகளை நடத்தாமல், கடந்த கால தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சியை மதிப்பிட பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் சிசோடியா தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்