பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் - பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2020-06-25 02:56 GMT
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, ஜவடேகர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
இந்த கூட்டத்தில், விண்வெளித்துறையில் தனியாரின் பங்களிப்பை அனுமதித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தும்,
 
சுயதொழில் முனைவோருக்கு வழங்கப்படும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு வட்டி மானியமாக 2% வழங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்