"நோயுற்றவர்கள் ரயில் பயணத்தை தவிருங்கள்" - குழந்தைகளுக்கும் ரயில்வே துறை அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், யார் யாரெல்லாம் ரயில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை ரயில்வே துறை வழங்கி உள்ளது.

Update: 2020-05-29 14:03 GMT
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், யார் யாரெல்லாம் ரயில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை ரயில்வே துறை வழங்கி உள்ளது. அதன்படி, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோயுற்ற நிலையில் உள்ளவர்கள் ரயில் பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கர்ப்பிணிப் பெண்களும், 10 வயதுக்கு குறைவான குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அவசியமின்றி ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என, ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்