கர்நாடகாவை மிரட்டிய கனமழை - கனமழைக்கு இண்டு பெண்கள் உயிரிழப்பு

கர்நாடகாவில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு இண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-05-27 03:48 GMT
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெங்களூரு நகரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இரவு பெங்களூர் நகரில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதில் பெங்களூரு நகரின் பேகூர் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஹேமா என்ற பெண்ணின் மீது மரம் முறிந்து விழுந்ததில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல நந்தினி லேஅவுட் பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஷில்பா என்ற பெண் உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்து மீளாத பெங்களூர் நகர மக்கள் , சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழையால்  வீடுகளில் உள்ளேயே முடங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்