4 ஆம் கட்ட ஊரடங்கு 18 ஆம் தேதிக்குள் அறிவிப்பு - பிரதமர் மோடி

கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2020-05-12 17:58 GMT
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் 4 ஆம் கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.கொரோனா வைரஸ் தொடுத்த போரால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டடுள்ளதாக தெரிவித்த பிரதமர், நாம் ஒருங்கிணைந்து வெற்றி பெற வேண்டிய தருணம் இது என வலியுறுத்தினார் 

கொரோனாவால் முடங்கி இருக்க முடியாது என்றும் நம்மை  தற்காத்து கொண்டு முன்னேறி செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது என்றும்  பிரதமர் மோடி விவரித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு தன்னிறைவு அடைவது தான் ஒரே வழி எனவும் Y2K பிரச்சனையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்த சிக்கலையும் கடக்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துளார்.

பிற நாடுகளைச் சாராமல், தன்னம்பிக்கையுடன் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்துமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களுக்கு  20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அது குறித்து நிதியமைச்சர் வரும் நாட்களில் விவரிப்பார் என பிரதமர் தெரவித்தார். 

எல்லா துறைகளையும் கருத்தில் கொண்டு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் , அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்த அவர், 4ம் கட்ட ஊரடங்கு குறித்து மே18க்குள் அறிவிக்கப்படும் என்றும் கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்