கெஜ்ரிவால் பதவியேற்பு விழா : பிற மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை

வருகிற 16 ஆம் தேதி, டெல்லி ராம் லீலா மைதானத்தில், ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

Update: 2020-02-13 07:25 GMT
வருகிற 16 ஆம் தேதி, டெல்லி ராம் லீலா மைதானத்தில், ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்து உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்