கடும் குளிரால் நடுங்கும் மக்கள் : அரசு சார்பில் தற்காலிக கூடாரம்
டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.;
டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை காக்கும் வகையில், பல இடங்களில் தற்காலிக கூடாரங்களை அரசு அமைத்து தந்துள்ளது. நடைபாதையில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் அந்த கூடாரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.