டெல்லியில் வழக்கறிஞர்களை கண்டித்து காவலர்கள், உயரதிகாரிகள் தர்ணா

பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்களை அச்சுறுத்தும் வகையில், போராட்டம் நடத்திய டெல்லி காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மாநகர காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Update: 2019-11-06 08:24 GMT
இது தொடர்பாக, டெல்லி மாநகர காவல்துறை தலைவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  வருண் தாக்கூர் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீசில் மக்களையும் வழக்கறிஞர்களையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் வழக்கறிஞர்களுக்கு எதிராக ஊடகங்களில் பேசிய காவலர்களும் காவல் துறை உயரதிகாரிகளும் கருத்து தெரிவித்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. காவல்துறை சட்டம் 1966-ன் கீழ் இது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் இது போன்ற பொறுப்பற்ற  நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவது தங்களது அதிகாரத்தை  பொது இடத்தில் போராட்டம் என்ற பெயரில் வெளிப்படுத்தி சமூகத்தி​ல் அச்சத்தை ஏற்படுத்த முயலுவது  ஜனநாயக நாட்டில் மிகவும் மோசமான நடவடிக்கை என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
சம்மந்தப்பட்ட காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்