Salem | Pongal | "பொங்கல் பரிசு.. உஷார்.." போலி டோக்கன் மூலம் மெகா வசூல் வேட்டை
சேலம் வாழப்பாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று தருவதாக கூறி, 200 ரூபாய் வீதம் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளிகளிடம் வசூல் வேட்டை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு டோக்கன் அளிப்பதாக வெளியான தகவல் காட்டுத்தீயைப் போல பரவியதால் பலரும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தனியார் கட்டுமான சங்க நலவாரிய அலுவலக நிர்வாகிகளை எச்சரித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.