Seeman | "திமுக அரசு ஏன் தவிர்க்கிறது.." "எழுத வேண்டும்.." - சீமான் ஆவேசம்
அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயர் நீக்கப்பட்டதாக கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலங்களில் அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்றே எழுதப்பட்டிருந்தாகவும், திமுக அரசு ஏன் இதனை தவிர்க்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்டை மாநிலங்கள் போல் மாநிலப் பெயர்களை பெருமையுடன் அரசு பேருந்துகளில் எழுத வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.