- சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்துள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது...வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 231 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- கொள்கை பிடிப்பு இல்லாத எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எரியப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்றும் சாடினார்...
- பொங்கல் பரிசுத் தொகுப்போடு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்...ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி நாட்கள் உயர்த்தப்பட்டதை பாராட்ட, திமுக அரசுக்கு மனமில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்...
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று சந்திக்கிறார்...சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இன்று மதியம் சந்திப்பு நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
- புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு....
- தமிழகத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
- திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில், மதவெறி அரசியல் செய்யப்படுவதாக கூறி மதுரை பழங்காநத்தத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமாவளவன், திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது என்று கூறினார்.
- பகவத் கீதை மதம் சார்ந்தது அல்ல, அது மனித வாழ்விற்கான தார்மீக அறிவியல் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்...கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை விசாரித்த அவர், பகவத் கீதை முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவங்களை பிரதிபலிப்பதாகவும் கூறினார்...
- கீழமை நீதிமன்றங்களில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டாய இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு போராட்டம் அறிவித்துள்ளது.... ஜனவரி 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
- வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று இன்குலாப் மஞ்சோ (Inqilab Moncho) அமைப்பு வலியுறுத்தியுள்ளது... ஹாடியாவைக் கொன்றது யார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்காமல் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது...
- ஜெர்மனியில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் 2 வெவ்வேறு கொள்கைகளுக்கு இடையே மோதல் நடப்பதாக தெரிவித்துள்ளார்...இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு ஒரு நபர் முடிவெடுக்கும் மாடல் பொருந்தாது எனவும் அவர் சாடியுள்ளார்
- வங்கதேச பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி பிப்ரவரி 12ஆம் தேதி அன்று நடைபெறும் என அந்நாட்டின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...மாணவர் இயக்க தலைவரான ஹாடி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்...
- அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பா.ஜ.க அகற்ற முயல்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்...பாஜகவின் முயற்சியைத் தடுத்து, அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்...
- சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தால் நியூசிலாந்திற்கு ஏற்றுமதியாகும் இந்திய ஒயின் மற்றும் மதுபானங்களுக்கான முழுமையான வரி விலக்கு அமலுக்கு வந்தது...நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு விதிக்கப்படும் வரி அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...