நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

Update: 2025-12-23 02:28 GMT

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்கும் மிரட்டல் வந்த நிலையில், அங்கு மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. இதனிடையே மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்