படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே `சிறை' பட இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
"சிறை" திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியிலேயே, இயக்குனர் சுரேஷுக்கு தயாரிப்பாளர் லலித் குமார் கார் ஒன்றை பரிசளித்தார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான ‘சிறை' திரைப்படத்தின் Preview Show நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் லலித் குமார் இயக்குனர் சுரேஷுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இதனை இயக்குனர் சுரேஷ் தனது குடும்பத்தினருடன் பெற்றுக் கொண்டார்.