சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ‘அனந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில், தேவா இசையில், நிழல் ரவி, தலைவாசல் விஜய், சுகாசினி, ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் இத் திரைப்படம் உருவாகியுள்ளது .