அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் நாளை காலை கரையை கடக்கிறது

அரபிக்கடலில் உருவான வாயு புயல் நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-12 08:53 GMT
அரபிக்கடலில் உருவான வாயு புயல் நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டார்கா, சோம்நாத், சாசன், குச் போன்ற கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று பிற்பகலே அங்கிருந்து வெளியேறுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. குஜராத்தின் போர் பந்தர் மற்றும் விராவல் இடையே வாயு புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்