குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய ஆட்சி அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2019-05-24 17:27 GMT
17-வது மக்களவை தேர்தலில் 303 இடங்களைப் பெற்று பா.ஜ.க. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 16-வது மக்களவையை கலைக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராஜினாமா கடிதம் மற்றும் 16-வது மக்களவையை கலைப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அளித்தார். பிரதமரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், புதிய ஆட்சி அமையும் வரை பிரதமர் பதவியில் தொடருமாறு , நரேந்திர மோடியை அறிவுறுத்தி உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்