Jordan | PM Modi | பிரதமர் மோடி கால் வைத்ததும் - ஜோர்டான் கொடுத்த வியக்க வைக்கும் வரவேற்பு
ஜோர்டான் தலைநகர் அம்மானில், அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிராக எடுக்கும் ஜோர்டானின் நிலைப்பாட்டைப் பிரதமர் பாராட்டினார்.
காசாவில் அமைதியை ஏற்படுத்துவதில், தொடக்கத்தில் இருந்தே ஜோர்டான் முக்கியப் பங்காற்றியது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோர்டான் மன்னருடனான சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.