லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மகன் நிக் ரெய்னரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவிக்கு உள்ள மூன்று குழந்தைகளில் நிக் இரண்டாவது மகன். திரைக்கதை எழுத்தாளராக இருந்த இவர், ஒரு காலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. "