"10 % இட ஒதுக்கீடு : அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு

10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்பி - நவநீத கிருஷ்ணன்குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-01-09 14:57 GMT
10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்பி - நவநீத கிருஷ்ணன்குற்றஞ்சாட்டினார்.  பொருளாதார ரீதியில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மீது பேசிய அவர், ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.  இட ஒதுக்கீடு என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல், ஜாதி வாரியாக இருக்க வேண்டும் என்றும், எந்தவொரு ஆவணமும் கணக்கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10 சதவீத இட  ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளதாகவும் நவநீத கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.பின்னர், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்