சபரிமலையில் கப்பற்படையின் ஹெலிகாப்டர் பறந்த விவகாரம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கப்பற்படை

சபரிமலையில் கப்பற்படையின் ஹெலிகாப்டர் பறந்த விவகாரம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கப்பற்படை

Update: 2018-11-22 04:24 GMT
சபரிமலை வனப்பகுதிக்கு மேலே கடந்த 19ஆம் தேதி கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்ததால் கேரளாவில் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து சமூக வலைதளத்தில் அதற்கான பதிலை கப்பற்படை பதிவிட்டுள்ளது. அதில், கேரள அரசின் வேண்டுகோளுக்கிணங்கவும், சபரிமலையின் பாதுகாப்புக்காகவும் ஹெலிகாப்டர் பறந்தது சட்டப்பூர்வமானது என்று அறிவித்துள்ளனர். இதற்கு முன்பும் இதே போன்ற மண்டல பூஜை நடை காலங்களில் ஹெலிகாப்டர் பறக்கவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தடை செய்யப்பட்ட பகுதி அல்ல என்பதோடு கட்டுப்பாடு பகுதி என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்