கேரளாவுக்குள் நுழைந்தது கஜா... 12 மணி நேரத்திற்குள் அரபி கடலை அடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

உள் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென் மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கேரள பகுதிகளில் நிலவுகிறது.

Update: 2018-11-17 02:28 GMT
கொச்சிக்கு தென் கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் அரபி கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்களில்  கனமழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் குறித்த பிரத்யேக முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
Tags:    

மேலும் செய்திகள்