இந்திய உளவு பிரிவு "ரா" மீதான புகார் : மோடியுடன் தொலைபேசியில் பேசினார் சிறிசேனா

தம்மை கொல்ல இந்திய அரசின் உளவுப் பிரிவான "ரா" சதி செய்வதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் சிறிசேனா மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-18 03:09 GMT
தம்மை கொல்ல இந்திய அரசின் உளவுப் பிரிவான "ரா" சதி செய்வதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் சிறிசேனா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை, இலங்கை அதிபர் சிறிசேனா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,  இந்திய  பிரதமர் மோடி, இலங்கைக்கு உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவை கெடுக்கும் வகையில், திட்டமிட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல்களை பரப்பி இருப்பதாக, அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அண்டை நாட்டுக்கே முதல் உரிமை என்ற இந்திய அரசின் முன்னுரிமை திட்டம் இலங்கை, இந்தியா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த உதவி இருப்பதாக பிரதமர் மோடியிடம் சிறிசேனா குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்