மம்முட்டியின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டம் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் 70வது பிறந்த நாளையொட்டி சக நடிகரான மோகன்லால் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Update: 2021-09-07 08:51 GMT
இந்நிலையில் நடிகர் மோகன்லால் தனது வாழ்த்து செய்தியில் மம்முட்டி தனது சிறந்த நண்பனாகவும் சகோதரனாகவும் கடந்த 45 ஆண்டுகளாக நெருக்கமான உறவில் இருப்பதாகவும் தனது சொந்த அண்ணன் உயிரோடு இல்லாத நிலையில் அவரது இடத்தில் மம்முட்டியை காண்பதாகவும் தெரிவித்துள்ளார். மம்முட்டியின் சிறப்பு அம்சங்கள் அனைவரின் பாராட்டுதலுக்கு உரியது எனவும் தனது பணியில் மனப்பூர்வமாக எப்போதும் ஈடுபாடு கொண்டவர் எனவும் மம்முட்டியின் குணநலன்களை குறிப்பிட்டு அவரை மோகன்லால் வாழ்த்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்