கவனம் ஈர்க்கும் சார்பட்டா திரைப்படம் - சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு

சார்பட்டா - உண்மை கதையை உயிரோட்டத்தோடு பேசியுள்ள படம் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள். வடசென்னையும், சார்பட்டா வரலாறும் என்ன? பார்க்கலாம்.

Update: 2021-07-24 03:54 GMT
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது, சார்பட்டா பரம்பரை திரைப்படம்.70 களில் வடசென்னை மக்களின் வாழ்வியலோடு ஒன்றி இருந்த குத்துச்சண்டை விளையாட்டை பற்றிப் பேசுகிறது, இந்தப் படம். வடசென்னையில், நான்கைந்து குத்துச்சண்டை பரம்பரைகள் இருந்தபோதும், அதில் நீண்ட காலத்திற்கு வீழ்த்த முடியாத உச்சத்தில் இருந்ததுதான் சார்பட்டா பரம்பரை. இதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோல்வியே காணாமல் இருந்தவர், சார்பட்டா ஆறுமுகம். தொடக்கத்தில் ஆர்வமில்லாமல் குத்துச் சண்டையில் கலந்துகொண்டு, சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசாக வலம் வந்தவரும் இவர்தான்.  குத்துச்சண்டையின் விளையாட்டு நுணுக்கங்களை, வடசென்னை இளைஞர்களுக்கு பயிற்சியாக அளித்து வரும் சார்பட்டா ஆறுமுகம், அந்த இளைஞர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் சாதனை புரியவும் காரணமாக இருக்கிறார்.வடசென்னைக்கு மட்டுமே தெரிந்த இந்த வீர வரலாறு, சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்திருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்