இந்தியில் சூரரைப் போற்று திரைப்படம் - நடிகர் சூர்யா தயாரிக்கிறார்

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் வெளியாக உள்ளது.

Update: 2021-07-12 10:51 GMT
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் வெளியாக உள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது இந்தியிலும் தயாரிக்கப்பட உள்ளது. சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் இந்த படத்தை தயாரிக்க உள்ளன. முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கராவே, இந்தியிலும் இந்த படத்தை இயக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்