சமூக வலைதளங்களில் மீண்டும் நடிகர் சிம்பு - 'Atman-SilambarasanTR' - வீடியோ வெளியிட்ட சிம்பு

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த நடிகர் சிம்பு தற்போது மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற அனைத்து தளங்களிலும் இணைந்துள்ளார்.

Update: 2020-10-22 09:05 GMT
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த நடிகர் சிம்பு தற்போது மீண்டும் பேஸ்புக்,  இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப்  போன்ற அனைத்து தளங்களிலும் இணைந்துள்ளார். இன்று காலை 9.09 மணிக்கு அவர் இணைய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், 'Atman-SilambarasanTR' என்று பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சிலம்பரசன் செய்யும் உடற்பயிற்சி, சிலம்பம் மற்றும் நடன பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.  சிம்புவின் வருகையால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள், சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்