"பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை"

பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக், தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2020-05-24 03:58 GMT
பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக், தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 36 வயதான அவர், பெங்களூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சென்னை வந்த அவர், வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதால், திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் என்ற கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தங்கி இருந்தார். மாதக்கணக்கில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்