மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Update: 2019-07-19 15:01 GMT
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வரும் தர்பார் படத்தை தொடர்ந்து, சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, அநேகமாக செப்டம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சில இயக்குநர்களின் படங்களிலும் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்