மணி ரத்னம் படத்திலிருந்து சிம்பு விலகல்?

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

Update: 2019-05-11 14:52 GMT
இதை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் சிம்பு ஒப்பந்தமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவரை தொடர்ந்து ஒப்பந்தமான நயன்தாரா இந்த படத்தில் சிம்பு இருந்தால் தான் நடிக்க மாட்டேன் என சொல்லியதாகவும் அதனால் சிம்பு இந்த படத்திலிருந்து விலகியதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகின. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் நயன்தாராவுக்கு எதிராக ஹாஷ்டாக் உருவாக்கி கோபத்தை வெளிபடுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்