#ThanthiTVOpinionPoll | (18/03/2019) மக்கள் யார் பக்கம்: உங்கள் வாக்கு யாருக்கு?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
#ThanthiTVOpinionPoll | (18/03/2019) மக்கள் யார் பக்கம்: உங்கள் வாக்கு யாருக்கு?
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதி மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

திருவள்ளூர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு? 



திருவள்ளூர் தொகுதியில் உங்கள் வாக்கு யாருக்கு என கேட்டதற்கு அமமுகவிற்கு வாக்களிப்போம் என  5 முதல் 11 சதவீத மக்களும், திமுக கூட்டணிக்கு   40 முதல் 46 சதவீத பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என  41 முதல் 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்சென்னை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு? 



தென்சென்னையில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என 5 முதல் 8 சதவீதம் பேரும் , மக்கள் நீதி மய்யத்திற்கு என 6 முதல் 12 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 37 முதல் 43 சதவீதம் பேரும் , திமுக கூட்டணிக்கு என 39 முதல் 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?

 

திண்டுக்கல்லில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என 8 முதல் 14 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 29 முதல் 35 சதவீதம் பேரும் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 46 முதல் 52 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

சேலம் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



சேலத்தில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என 5 முதல் 8 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு என 41 முதல் 47 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என்று 43 முதல் 49 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தேனி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



தேனியில் அமமுகவுக்கே எங்கள் வாக்கு என 17 முதல் 23 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு என 34 முதல் 40 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என்று 35 முதல் 41 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

கரூர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



கரூரில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என 5 முதல் 8 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 42 முதல் 48 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 43 முதல் 49 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மதுரை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



மதுரை தொகுதியில் 6 முதல் 12 சதவீதம் பேர் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்றும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 39 முதல் 45 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என 43 முதல் 49 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

கோவை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு? 



கோவையில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என 5 முதல் 8 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு  வாக்களிப்போம் என 41 முதல் 47 சதவீதம் பேரும் அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 43 முதல் 49 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



தூத்துக்குடி தொகுதியில் அமமுகவுக்கு என 6 முதல் 9 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு என 36 முதல் 42 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு என 44 முதல் 50 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



மயிலாடுதுறையில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என 7 முதல் 13 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 37 முதல் 43 சதவீதம் பேரும் திமுக கூட்டணிக்கு என்று 44 முதல் 50 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



திருப்பூரில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 5 முதல் 8 சதவீதம் பேரும்
திமுக கூட்டணிக்கு என 41 முதல் 47 சதவீதம் பேரும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 44 முதல் 50 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



சிதம்பரத்தில் அமமுகவுக்கு எங்கள் வாக்கு என 5 முதல் 8 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 39 முதல் 45 சதவீதம் பேரும் திமுக கூட்டணிக்கு என 43 முதல் 49 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மத்திய சென்னை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு? 



மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிப்போம் என்று 5 முதல் 8 சதவீதம் பேரும் , அதிமுக கூட்டணிக்கு என்று 34 முதல் 40 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என்று 49 முதல் 55 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  8 முதல் 14 சதவீதம் பேர் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்றும், அதிமுகவுக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 35 முதல் 41 சதவீதம் பேரும் திமுக கூட்டணிக்கு என 43 முதல் 49 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

அரக்கோணம் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?



அரக்கோணத்தில் அதிமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என்று 40 முதல் 46 சதவீதம் பேரும் திமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என்று 44 முதல் 50 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்