பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
x
நடப்பு  கல்வியாண்டில் 220 நாட்கள் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில்  சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதில் உலர் உணவு பொருட்களை வழங்க அரசு முடிவு செய்து, மே மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதே போல ஜூன் மாதம் முதல் தமிழகத்தில்  இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. தொடக்க கல்வி மாணவர்களுக்கு, நாள்தோறும் 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பும், உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 56 கிராம் பருப்பும் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்