(12/08/2020) ஊர்ப்பக்கம்

ஆண்டு தோறும் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 ஆயிரம் ஹெக்டேரில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது.
(12/08/2020) ஊர்ப்பக்கம்
x
கேழ்வரகு விதைப்பு பணி மும்முரம் - மாடுகளுக்கு பூஜைகள் செய்து பணிகள்  துவக்கம்

ஆண்டு தோறும் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 ஆயிரம் ஹெக்டேரில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேழ்வரகு விதைப்பு பணியில் விவசாயிகள்  மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விதைப்புக்கு முன்பாக, மாடுகளுக்கு பூஜைகள் செய்து விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.


தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் குப்பைகள் - தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம்  உல்லியக்குடி கிராமத்தில் உள்ள உரக்கிடங்கில் ஊராட்சி  பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரிக்காமல்  கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குப்பைகளில் ஏராளமாக  டயர், தேங்காய் சிரட்டை மற்றும் பிளாஸ்டிக் பைகள் இருப்பதால் கொசு உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடி தொழிலாளர்கள் திடீர்  போராட்டம்

பரமத்திவேலூரை அடுத்த கீரம்பூர் சுங்கச்சாவடியில்  பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு 4 மாதமாக முறையாக  சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில்   வாகனங்களில் வசூல் செய்யப்பட்ட பணத்தை முறையாக கணக்கரிடம் ஒப்படைக்காமல் தொழிலாளர்கள் திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

2 சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : 2 பேர் படுகாயம்-கார் ஓட்டுனர் கைது

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே 2 சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளாது. இதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ரிஷி என்ற இளைஞருக்கு  வலது கை துண்டானது. மேலும் அவருடன் வந்த கவுதம் என்பவர் படுகாயம் அடைந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த தினேஷ் என்பவரை போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் உலா வந்த முதலை

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையின் அருகே 70 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று சுற்றி திரிவதாக  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்த முதலையை பிடித்து முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட்டனர். தற்போது நீர்வரத்து குறைந்ததால் முதலைகள் ஆற்றங்கரையில் இருந்து ஊருக்குள் உலாவர வாய்ப்புள்ளது என்றும் கரையோ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்