தமிழகத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு - கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது

தமிழகத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு - கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது
x
கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக, ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  மருந்துக்கடைகள் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே செயல்படும். பெட்ரோல் பங்குகள் உட்பட கடைகள் எதுவும் செயல்படாது.

Next Story

மேலும் செய்திகள்