குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் - திறந்த வெளியில் காத்திருக்கும் அவல நிலை

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
x
மதுரை அரசு மருத்துவமனையில் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த இருவர் குடல்வால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததை அடுத்து, படுக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்