"B.C.S. படிப்பு B.com-க்கு இணையானது" - சான்று வழங்க காமராஜர் பல்கலை கழகத்துக்கு ஆணை

B.C.S. பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது என்று சான்று வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
B.C.S. படிப்பு B.com-க்கு இணையானது - சான்று வழங்க காமராஜர் பல்கலை கழகத்துக்கு ஆணை
x
மதுரை திருநகரை சேர்ந்த கலைவாணி, தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. B.C.S படிப்பு, B.Com பட்டப்படிப்புக்கு இணையானது என்பது தொடர்பாக அரசாணை உள்ள நிலையில், தனக்கு சான்று வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மறுப்பதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இதனால், தனது கணக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு கேள்விக்குறியாகி இருப்பதாக கலைவாணி மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிஷா பானு, B.C.S படிப்பு B.Com படிப்புக்கு இணையானது என சான்று வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்