"அதிமுக ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது" - ரங்கசாமி

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது என என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்
அதிமுக ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது - ரங்கசாமி
x
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் அறிமுக கூட்டம் புதுச்சேரி அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் பெறு​ம் வெற்றியானது எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்